×

வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: வடமாநில இளைஞர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கெட்டன மல்லி பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலைகளில் வேலை பார்த்துவிட்டு வடமாநில இளைஞர்கள் கன்லூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் முட் புதர்களில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் வடமாநில இளைஞர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது ஆரணி சேர்ந்த 17 வயது சிறுவர்கள் தெரியவந்தது. பின்பு கிராம மக்கள் 2 சிறுவர்களையும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : boys ,burglary , Sewer, 2 boys, arrested
× RELATED நாகை அருகே கஞ்சா புகைக்கும் சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ