×

பள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் சாலையில் மாநகரப் பேருந்து பள்ளத்தில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எழும்பூரில் இருந்து எண்ணூர் நோக்கி வந்து கொண்டிருந்த மாநகர பேருந்து மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாற்று வழியில் வ.உ.சி நகர் வழியாக ஏ.இ.கோயில் சந்திப்பு வந்தது. அப்போது, பாதாள சாக்கடை மூடி உடைந்து பேருந்தின் முன்பக்கம் சக்கரம் உள்ளே சிக்கியது.

வெகுநேரமாகியும் எடுக்க முடியாததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஓட்டுநர் பேருந்ததை பள்ளத்திலிருந்து மீட்டார். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் ஏ.இ.கோயில் சந்திப்பில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Tags : City bus stuck in a ditch
× RELATED சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது...