×

அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ கல்வியில் 25 சதவீத மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர்ஸ் வைத்தவர்களும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்தும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் உள்ளது.

சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர்ஸ் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறான முடிவாகும். எனவே, அரியர்ஸ் மாணவர்களும் தேர்ச்சி என்ற அரசு அறிவித்த முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். வழக்கு முடியும்வரை அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் வக்கீல் ராம்குமார் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ராம்குமார் வழக்கு விசாரணைக்கு வரும்போது, தனது மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டுமென்று பாலகுருசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றார். வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உ்த்தரவிட்டனர்.

Tags : Aryans ,Arias , Arias students, notice of graduation, cancellation, lawsuit, government response, High Court
× RELATED ஆரியம், திராவிடம் பற்றி பேசி வரலாற்றை...