×

பெண் தற்கொலை

பட்டாபிராம்: பட்டாபிராம் சத்திரம் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் கீதா (45). கூலி வேலை செய்து வந்தார். இவரது கணவர் அறிவழகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வாழ்கின்றனர். கீதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை கீதா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கீதாவுக்கு சரியாக வேலை இல்லாமல் இருந்ததாகவும், மேலும் தனியாக வசித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்தது தெரியவந்தது.


Tags : suicide , Woman, suicide
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை