×

கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வேளூர் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களிடம் வாலிபர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்வது மற்றும் குடிபோதையில் இரவு நேரத்தில் கத்தியுடன் ரகளை செய்வதாக பல்வேறு புகார்கள் காட்டூர் போலீசாருக்கு வந்தது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், காட்டூர் எஸ்.ஐ.விஷ்ணு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சந்தேகத்துக்கிடமாக கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில், அனுப்பம்பட்டு அண்ணாநகரை சேர்ந்த செல்வமணி (23), வேளூர் தமிழ் காலனியை சேர்ந்த சுந்தர் (32) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.Tags : Knife, 2 persons, arrested
× RELATED கத்தியை காட்டி வழிப்பறி