×

வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை: மின்னணு தொழில் தொடங்க ஏதுவாக புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.!!!

சென்னை: வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகமான அளவிற்கு முதலீடு ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூ.30.664 கோடி முதலீடு ஏற்பட்டுள்ளது.  இதன்மூலம், 67,212 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையிலும், புதிய மின்னணு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏதுவாகவும்  புதிய  தொழிற்கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நிகழ்ச்சியில்  தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம்,  தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போது வெளியிடப்பட்ட புதிய தொழிற்கொள்கை மூலம் தமிழ்நாட்டிற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல ஆயிரம் பேருக்கு நேரடி வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.



Tags : Palanisamy ,e-business. ,Tamil Nadu , Action to attract foreign investment to Tamil Nadu: Chief Minister Palanisamy has released a new business policy to start an electronic business. !!!
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...