×

தமிழகத்துக்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வரும் 12ம் தேதி சென்னை சென்ட்ரல்-டெல்லி இடையே (ரயில் எண் 02615) அதிவிரைவு சிறப்பு ரயில் தினமும் இரவு 7.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக டெல்லி-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் (ரயில் எண் 02616) அதிவிரைவு சிறப்பு ரயில் டெல்லியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும் சென்ட்ரல்-ஷாப்ரா இடையே (ரயில் எண் 02669) திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும். அதைப்போன்று மறுமார்க்கமாக ஷாப்ரா-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் (ரயில் எண் 02670) சிறப்பு ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ஷாப்ரா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும்.திருச்சி-ஹவுரா ரயில் (ரயில் எண் 02664) செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும். அதைப்போன்று மறுமார்க்கமாக ஹவுரா-திருச்சி இடையே இயக்கப்படும் (ரயில் எண் 02663) வாராந்திர சிறப்பு ரயில் வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுராவில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்.

Tags : Tamil Nadu ,Southern Railway Announcement. ,Southern Railway Announcement , Tamil Nadu, in addition, 3 special trains, Southern Railway
× RELATED தமிழகத்தில் மேலும் கூடுதலாக 3 சிறப்பு...