×

தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை டிரம்பால் மட்டுமே காப்பாற்ற முடியும்: ஒசாமா பின்லேடன் மருமகள் பரபரப்பு பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பால் மட்டுமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என்று, சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார்.  கடந்த 2001 செப். 11ம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய 4 தாக்குதல்களில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன், சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ராணுவ படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் என்பவர், ‘நியூயாரக் போஸ்ட்’ என்ற பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் மட்டுமே, அமெரிக்காவை காப்பாற்ற முடியும். அவரை எதிர்த்து போட்டியிடும் பிடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், 9/11 போன்ற மற்றொரு தாக்குதல் அமெரிக்காவில் நிகழலாம்’ என்று தெரிவித்துள்ளார். நூர் பின்லேடன், பிரபல சுவிஸ் எழுத்தாளர் கார்மென் டுஃபோரை மணந்தார். பின்னர், இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நூர் பின்லேடின் தனது தாய், இரண்டு சகோதரிகளான வாஃபா மற்றும் நாசியாவுடன் சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் தொடர்பு இருக்கக் கூடாது என்பதற்காக இவரது குடும்பத்தினர் தங்கள் குடும்பப் பெயரை லேடன் என்பதற்கு பதிலாக லேடின் என்று எழுதுகிறார்கள். நூர் பின்லேடின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தாலும், தன்னை முழுக்க முழுக்க அமெரிக்கர் என்று கருதுகிறார். கடந்த 2015 முதல் டிரம்ப்பின் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : extremists ,Trump ,America ,daughter - in - law interview ,Osama bin Laden , Only Trump, America , extremists,Osama bin Laden's daughter ,interview
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...