ஏசி உணவகங்கள் செயல்பட அனுமதி: தமிழக அரசு உத்தரவு

சென்ைன: தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு உணவகங்கள் திறக்க பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உணவகங்களில் ஏசி இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. மேலும், ஏசி இயங்காது என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில் உணவகங்களில் ஏசி இயங்காததால், வாடிக்கையாளர்கள் வருவதையே தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், உணவகங்களில் ஏசி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று உணவகங்களில் ஏசி பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வரும் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட அளவில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

Related Stories:

>