×

குடும்பமே வறுமையில் தவிப்பு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆன்ராய்ட் மொபைல் இல்லை: கல்வி கற்க முடியாமல் பழம், தேங்காய், பப்ஸ் விற்கும் மாணவர்கள்

அருப்புக்கோட்டை: குடும்பம் வறுமையில் தத்தளிக்கும் நிலையில் ஆன்ராய்ட் மொபைல் இல்லாமல், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் டிரைவரின் மகன்,மகள் தவித்து வருகின்றனர். இதனால் கடையில் வியாபாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை திருநகரம் பொன்னுச்சாமிபுரம் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன். தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன்,மகள், 10ம் வகுப்பும் மற்றவர்கள் 3,5,7,8 வகுப்புகள் படிக்கின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆன்ராய்ட் மொபைல் அவசியம். ஆனால் சக்திவேல் முருகனுக்கு குறைந்த வருமானமே வருவதால், குடும்பம் நடத்துவதே சிரமமாக உள்ள நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் மகன், மகளுக்கு போன் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். இதனால் குடும்ப சூழ்நிலையை உணர்ந்த இவருடைய மகன் ஹரிஹர பிரசாத் பழக்கடையிலும், மகள்கள் யோகா தேங்காய் கடையிலும், உதய மீனா பப்ஸ் விற்றும் வருகின்றனர். இதனால் இவர்கள் கல்வி தடைபடும் நிலை உள்ளது.

இதுகுறித்து சக்திவேல் முருகன் கூறுகையில், ‘‘நானும், எனது மனைவியும் படிக்கவில்லை. எங்கள் குழந்தைகளாவது படிக்கவேண்டும்.என்ற எண்ணத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தோம். ஆனால் ஏழையான என்னால் ஆன்ராய்ட் போன் வாங்கி கொடுக்க முடியாது. இதனால் எனது பிள்ளைகள் ஆன்லைனில் கல்வி முடியாத நிலை உள்ளது. அரசு மாற்று ஏற்பாடு செய்து எங்களை போன்ற வறுமையான சூழ்நிலையிலுள்ள ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும்’’ என்றார்.

Tags : pubs ,education Students , Attend ,online, class ,family,fruit ,pubs
× RELATED சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி...