×

வேலூர், ராமநாதபுரம் உள்பட 4 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்

சென்னை: வேலூர், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 4 எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த செல்வக்குமார், வேலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த பர்வேஸ்குமார், ரயில்வே(சென்னை) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த மகேஷ்வரன், சென்னை பூக்கடை துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாகவும், அந்த மாவட்ட எஸ்பியாக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த வருண்குமார், சிறப்பாக செயல்பட்டு வந்தார். ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தார். முற்றிலுமாக கடத்தலை ஒழித்தார். அவர் நேர்மையாக செயல்பட்டதால், சில அரசியல் கட்சிகள் அவர் மீது புகார்களை தெரிவிக்கத் தொடங்கினர். அதில் நடிகர் கருணாஸ் தொடர்ந்து அவர் மீது புகார் தெரிவித்து வந்தார். பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு கொலைக்குப் பிறகு பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தொடர்ந்து மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால் அவரை மாற்ற தமிழக அரசு அதிகாரிகள் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் மாற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Action change ,Ramanathapuram ,Vellore , Vellore, Ramanathapuram, 4 SPs, Action Change
× RELATED சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள அதிரடி மாற்றம்