×

ஓட்டல், கிளப்களில் மது பார்களை திறக்க அனுமதி

சென்னை: நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் உள்ள மது பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
 பார்களை திறக்க விதிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:
* பார்களுக்கு வருவோரிடையே ஒருவருக்கு ஒருவர் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
* பார்களில் உள்ளே வரும் போது கைகளை கழுவ வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* பார்களில் எச்சில் துப்புவது, கண்டிப்பாக அனுமதியில்லை.
* கொரோனா தொற்று அறிகுறி இருப்பது போல தெரிந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* பார்களில் 50 சதவீத இருக்கைள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மது விலக்க மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் மோகன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

Tags : clubs ,hotels , Hotel, Club, Wine Bar, Open, Permission
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்