×

சென்னையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை...!!! ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!!!

சென்னை:  சென்னை நுங்கப்பாக்கத்தில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நுங்கப்பாக்கம் திருமூர்த்தி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, ஹர்ஷன் என்ற டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த தீபஞ்சி என்பவர் வேளச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் சென்னையின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கைதாகியுள்ள 6 பேரும் ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் இணையதளம் மூலம் விற்பனை செய்துள்ளனர். சென்னையில், கஞ்சா விற்பனை கொடிகட்டி பறந்து வரும் நிலையில், அதனை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் கஞ்சா விற்பனையானது ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதனிடையே அண்மையில், சென்னை விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மேலும் ஒரு கும்பல் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : cannabis sale ,Chennai , cannabis sale , Chennai,Weed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...