×

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: அமைச்சரின் உதவியாளரிடமும் விசாரணை

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 10 மணி நேரத்திற்கும் மேல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலிருந்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் 3 கார்களில் வந்த  10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு அதிகாரி அலுவலகத்திற்குள் நேற்று பிற்பகல் 12 மணியளவில் நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது அமைச்சர் மா. பா. பாண்டியராஜனின் உதவியாளர் திருநாவுக்கரசு என்பவர் நகராட்சி அலுவலகத்தில் இருந்தார். அவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.

பின்னர் அவரிடம் சோதனையிட்ட அதிகாரிகள் அவரை வெளியே விட மறுத்து, தனி அறைக்கு அழைத்து சென்று மீண்டும் விசாரித்தனர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி அளிக்க நகரமைப்பு பிரிவில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை 10 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : office ,police raid ,Thiruverkadu ,minister , Thiruverkadu, Municipal Office, Anti-Corruption Police, Check, Assistant to the Minister, Investigation
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...