×

பாக். தாக்குதல் ராணுவ அதிகாரி வீர மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில்  நேற்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தான் தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திய ராணுவ அதிகாரி, பின்னர் உயிரிழந்தார். இது, கடந்த 4 நாட்களில் எல்லைக் கட்டுப்பாடு கோடு  பகுதியில் நடந்த 2வது சம்பவமாகும். கடந்த 30ம் தேதி இதே மாவட்டத்தில் உள்ள நவுசாராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Bach ,death ,army officer , Bach. Assault, military officer, heroic death
× RELATED பாக். வேகப்பந்து வீச்சாளர் உமர்குல் ஓய்வு