ஒழுக்கக்கேடானவை என்று கூறி டேட்டிங்கிற்கான 5 செயலிகளை தடை செய்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இளைஞர்களிடையே இருக்கும் டேட்டிங் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டேட்டிங் செயலிகள் இளைஞர்களிடையே பிரபலமடைவதை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தனது கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி ஐந்து செயலிகளை தடை செய்துள்ளது.

ஒழுக்கக்கேடானவை என குற்றம் சாட்டி, பாகிஸ்தான், டேட்டிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் தொடர்பான ஐந்து செயலிகளை தடை செய்தது. டிண்டர் (Tinder), டேக்ட் (Tagged), ஸ்கௌட் (Scout), க்ரிண்டர் (Grindr) மற்றும் சே ஹாய் (Say Hi) ஆகிய செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அகற்ற தவறிவிட்டார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிவிப்புக்கு பதிலளிக்காததால், அவற்றை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தகாத உறவுகள் மற்றும் ஓரினச்சேர்க்கை பாகிஸ்தானில் சட்டவிரோதமானது. இந்த இரண்டு வகையான உறவுகளும் இந்த டேட்டிங் செயலிகள் பலவற்றில் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த காரணத்தால்தான், இந்த ஐந்து செயலிகளிடமிருந்து பாகிஸ்தான் அரசு இந்த பிரச்சினைகளுக்கு விடை கோரியது. இருப்பினும் இந்த விஷயத்தில் எந்த செயலியின் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவற்றை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>