×

கீழக்கரை சாலைகளில் மாடுகள் ஜாலி உலா: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கீழக்கரை: கீழக்கரை பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரை வீதியில் காலையிலிருந்து மாலை வரை ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் போது முட்டித் தள்ளி விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆங்காங்கே சாணங்களை போட்டு விடுவதால் துர்நாற்றம் வீசகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து பவுண்டில் அடைத்து வைத்து மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது வழக்கம். தற்போது அதுபோல் செய்யாமல் விடுவதால் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை பால் கறக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் ரோட்டில் சுற்ற விடுகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அடைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.Tags : Cow Jolly Walk ,Lower Roads: Motorists in Accident , Cow, Jolly, Walk ,Lower , Motorists i,n Accident
× RELATED 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் பேனர்கள் அகற்றம்