டிஒய்எப்ஐ நிர்வாகிகள் படுகொலை காங்கிரஸ் தொண்டர்கள் 6 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகே வெம்பாயம் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ்(32). தேம்பாமூடு  பகுதியை சேர்ந்தவர் ஹக் முகமது (28). 2 பேரும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளாக இருந்தனர். 30ம்தேதி  நள்ளிரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.இது தொடர்பாக திருவனந்தபுரம் எஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக  காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஷஜித், நஜீப், அஜித், சதி, சஜீவ், சனல் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர  விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சஜீவ் உள்பட 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் சஜீவ், சனல், அஜித் ஆகியோர் கொலையில் நேரடியாக  ஈடுபட்டதாக போலீசார் கூறினர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, நேற்றும் திருவனந்தபுரம், கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்  நடத்தப்பட்டன. கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் அலுவலகங்கள் வெடிகுண்டு வீசியும், கல்வீசியும் தாக்கப்பட்டன.  கோழிக்கோடு மாவட்டத்திலும் 5 காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

Related Stories: