×

சாமியார்கள், மடாதிபதிகளின் வாகனங்களுக்கு டோல் வரி வசூலிக்க விலக்கு கோரி மடாதிபதி நிர்வாண போராட்டம்

பெங்களூரு: மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  மடாதிபதிகளின் வாகனங்களுக்கு டோல் வரி வசூலிக்கக்  கூடாது என வலியுறுத்தி  மடாதிபதி ஒருவர் நிர்வாணமாக தர்ணா போராட்டம் நடத்தினார்.கர்நாடக  மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டம், கவுரிபிதனூர் உள்ள சித்தரோட் மிஷன்  ஆசிரமம் உள்ளது. அதன் மடாதிபதியாக இருக்கும் டாக்டர்  ஆரோரபாரதிசுவாமி  நேற்று காலை பெங்களூருவில் இருந்து கவுரிபிதனூருக்கு காரில் சென்று  கொண்டிருந்தார். ராமோனஹள்ளி அடுத்த  திப்பகானஹள்ளியில் உள்ள தேசிய சுங்கச்  சாவடியில் அவரது காரை நிறுத்திய ஊழியர்கள், ேடால் கட்டணம் செலுத்தும்படி  கூறினர். அவர்  கட்டணம் செலுத்த மாட்டேன். எனது காரை அனுமதிக்க வேண்டும்  என்று வலியுறுத்தினார்.

இதனால் ஊழியர்களுக்கும் மடாதிபதிக்கும் இடையில்  கடும் வாக்கு வாதம் நடந்தது. திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆடைகளை  கழற்றி  நிர்வாண கோலத்தில் தனது கார் முன் தர்ணா போராட்டம் நடத்தினார்.  மடாதிபதிகள், சாமியார்கள், சாதுக்கள் பயணம் செய்யும் கார்களுக்கு சுங்கவரி  வசூலிக்ககூடாது. அதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று  கோரிக்கை  வைத்தார். மடாதிபதி நிர்வாணமாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் தகவல்  சுங்கச்சாவடி மேலாளரின் கவனத்திற்கு வந்ததும் ஓடி  வந்து மடாதிபதியிடம் பேசி  காரை அனுப்பி வைத்தார்.

இது சுங்கச்சாவடி ேமலாளர் பாலாஜி  செய்தியாளர்களிடம் கூறும்போது, சுங்கச்சாவடிகளில் டாக்டர்கள், நீதிபதிகள்,  பத்திரிகையாளர்கள் உள்பட  சிலரின் வாகனங்களுக்கு மட்டும் கட்டணம்  வசூலிக்ககூடாது என்று தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி கழகம், மத்திய  நெடுஞ்சாலைதுறை அமைச்சகம்  அனுமதி வழங்கியுள்ளது. மடாதிபதிகள், சாமியார்கள்  வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்ககூடாது என்று கூறிவில்லை. இது தொடர்பாக   மேலதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என்றார்.


Tags : protest ,Abbot ,abbots ,preachers , Abbot ,strikes naked ,demand exemption ,tax,preachers, abbots, vehicles
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...