×

இங்கிலாந்தில் உள்ள பென்னிகுயிக் கல்லறையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்..!!

சென்னை: இங்கிலாந்தில் உள்ள பென்னிகுயிக் கல்லறை மர்ம நபர்கள் சேதப்படுத்தியத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்களுக்கும் உதவும் வகையில், முல்லை பெரியாறு அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த பென்னிகுயிக். பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் தனது சொத்தை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டியதால் தமிழக மக்களால் பென்னிகுயிக் போற்றப்பட்டு வருகிறார்.

இவரது கல்லறை இங்கிலாந்தின் ஃபிரிம்லே நகரில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம் அருகில் உள்ளது. இவரது கல்லறையில் இருந்த கல்லால் ஆன சிலுவை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அருகில் உள்ள மற்ற கல்லறைகள் எந்த சேதமும் அடையாத நிலையில், பென்னிகுயிக் கல்லறை மட்டும் சேதமடைந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பென்னிகுயிக் கல்லறை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில, அரசுகள் பிரிட்டன் அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லறைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தவும் வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Vaiko ,UK ,MDMK ,tomb ,Penniquick ,cemetery ,Pennycuick , MDMK, Vaiko ,Pennycuick cemetery , UK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி