×

நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி அனிதா : திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்!!

சென்னை : நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி அனிதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நீட் தற்கொலையால் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக இருக்கும் நிலையில், நீட் தேர்வால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.

யார் அந்த அனிதா ?

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் பெற்றார்.2017ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததால் அனிதாவும் நீட் தேர்வு எழுதினார். அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா, 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இன்றுடன் அனிதா இறந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஸ்டாலின் ட்வீட்

இந்தநிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி!நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப்  பெறுவதே  மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி! எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Anita ,Stalin ,DMK , Anita, a social justice activist who sacrificed herself at the NEET altar: DMK leader Stalin's tweet !!
× RELATED பீகாரின் முங்கர் தொகுதியில் மறு...