×

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்!!

சென்னை: 108 சேவைக்கு புதிய வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

இதன் தொடர்ந்து, முதற்கட்டமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். இதில் அரசு சார்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன. 90 அவசர ஊர்திகளில் 10 வாகனங்கள் ரத்த சேவை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அவசர வாகனங்கள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படும். தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Palanisamy ,Tamil Nadu ,corona patients , Chief Minister Palanisamy has started the service of 118 ambulances to take corona patients in Tamil Nadu !!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...