×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்

சென்னை:தென் மேற்கு பருவமழைக்கு காரணமாக இருக்கின்ற மைய அச்சு வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்வதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது. 2 நாட்களாக வானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் காற்றின் திசை மாற்றியுள்ளால் மழை பெரிதாக பெய்யவில்லை. இருப்பினும், கோவில்பட்டியில் 30மிமீ, தேவக்கோட்டை 20 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் டெல்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்கு காரணமாக விளங்கும் Monsoon Trough Lion என்னும் பருவாக்காற்றின் மைய அச்சு, வரும் நாட்களில் இமய மலை அடிவாரம் நோக்கி நகர்கிறது.

இதனால் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி கடல் மட்டத்தில் இருந்து 1.5 கிமீ உயரம் வரை நீடித்துள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாகவும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும், சிலஇடங்களில் மிக கனமழை பெய்யும். பிற உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கால், பகுதிகளில் லேசானது மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலஇடங்களில் லேசான மழை பெய்யும்.


Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, 8 districts, today, heavy rain
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...