×

தமிழ்நாட்டிலே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது: மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்..!!

டெல்லி: ஓணம் திருவிழா கொண்டாட்டம் இன்று வெளிநாடுகளுக்கும் விரிவடைந்துவிட்டது என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றலின் போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் உள்பட எங்கும் உற்சாகமாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மேலும் இது திருவிழாவாக மாறிவருவதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்றும், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கூறியதாவது:

* புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது


* இந்த இக்கட்டான தொற்று காலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

* வெளியில் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

* விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

* நமது பழங்கால விளையாட்டு முறைகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்

* தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து மான்கி பாத் உரையின்போது பேசியுள்ளார்.

* தமிழ்நாட்டிலே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

* விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் உருவாக்க வேண்டும்.

* பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டது

* இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்..

* ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றக் கூடியவை

* இந்திய இனத்தை சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க மான்கி பாத் நிகழ்ச்சியில்பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.


Tags : Modi ,Thanjavur ,center ,Tamil Nadu , Maanki Bath show, Prime Minister Modi, speech
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...