×

நிதி நிலையில் தமிழக அரசு தள்ளாடும்போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா? பால் முகவர்கள் சங்கம் கேள்வி

சென்னை: நிதி நிலையில் தமிழக அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு இரண்டாவது தலைமை அலுவலகம் தேவையா என்று பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பால்வளத்துறைக்கு இரண்டாவது ஆணையர் அலுவலகத்தை மதுரையில் அமைக்க திட்டமிட்டு, பால்வளத்துறை சார்பில் கடந்த மார்ச் 5ம் தேதி நிதித்துறை சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டு ஆறு மாதத்திலேயே அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டுமென்று, அரசு ஊழியர் ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்புவிப்பு இவற்றில் கைவைக்கும் தமிழக அரசு இவ்விஷயத்தில் அவசரம் காட்டியுள்ளது ஏனோ?

மேலும் பால் கொள்முதல் அதிகரித்து விற்பனை அதிகரிக்காத காரணத்தால் உபரியான பால் ஆவின் பண்ணைகளில் சுமார் 12ஆயிரம் டன் பால் பவுடராக தேக்கமடைந்துள்ளது. இதை ஆறு மாதத்திற்குள் பயன்படுத்தா விட்டால் வண்டுகளுக்கும், புழுக்களுக்கும் தீவனமாகி ஆவின் நிறுவனம் சுமார் 300 கோடிக்கு மேல் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே ஆவின் நிறுவனம் இழப்பை சந்திப்பதை தடுக்க தேவை இரண்டாவது தலைமை அலுவலகம் அல்ல. உடனடியாக பால் விற்பனையை அதிகப்படுத்த தேவையான போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,head office ,Tamil Nadu , Financial Status, Government of Tamil Nadu, Dairy Department, 2nd Head Office, Need ?, Dairy Agents Association, Question
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...