×

பதிவின் படி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து பெரியநெற்குணத்தில் நேரடி நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்: அதிகார வர்க்கம், உள்ளூர் பிரமுகர்களுக்கு முன்னுரிமை

சேத்தியாத்தோப்பு:   சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு வரிசையில் கொள்முதல்  செய்யாததை கண்டித்து, விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நெற்குணம் கிராமத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 20  நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் பதிவு முறை படி நெல் கொள்முதல் நடைபெறவில்லை என கூறி, நேற்று  காலை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து, விவசாயிகள் தரப்பில் கூறியதாவது, பதிவு  வரிசையில் கொள்முதல் செய்யாமல் தங்களுக்கு வேண்டுவோருக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அதிகாரிகள் நெல்லை கொள்முதல்  செய்கின்றனர். 40 கிலோ கொள்முதல் செய்வதற்கு பதிலாக 41 கிலோ 200 கிராம் கொள்முதல் செய்வதும், விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 54  மறைமுகமாக வசூல் செய்கின்றனர்.   

 பதிவு செய்துள்ள விவசாயிகளில் பலர் பதிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் தாங்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல், அதிகார  வர்க்கத்திற்கும், உள்ளூர் பிரமுகர்களுக்கு கொள்முதல் செய்கின்றனர். மேலும் விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்தலுக்கான பருவ பட்டியலில் உள்ள கையெழுத்தை எழுத்தரே போட்டுக்கொள்கின்றனர். நெல் கொள்முதல்  நிலையத்தில் டோக்கன் 6ம் எண் கொண்டு வந்துள்ள நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாகவும், அதற்கு பிறகு வந்த  டோக்கன்களுக்கான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறி பெரிய நெற்குணத்தைச் சேர்ந்த விவசாயி சர்க்கரவர்த்தி மனைவி ஆனந்தி  தெரிவித்தார். ேமலும், தனது நெல்லை விரைவாக கொள்முதல் செய்யாததால் முளைத்த நெல்லை காண்பித்தார். இதில் பெரியநெற்குணம், வீரமுடையாநத்தம், கிராம விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அதிகாரிகள் யாரும் வராததையடுத்து, கலைந்து  சென்றனர். பதிவு செய்த டோக்கன் வரிசைப்படி விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : station ,protest ,personalities , Farmers, blockade direct, ruling class, ,personalities
× RELATED வெறுப்புணர்வை தூண்டும் வகையில்...