×

எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று கூறியதாவது: தற்போது எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக இருக்கிறது. விழிப்புடன், சொல்வதை புரிந்துகொள்கிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணிக்கிறது. அவரது உடல்நிலை மெல்ல, மெல்ல முன்னேறி வருகிறது. கடந்த 2 நாட்களை விட தற்போது நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்களும், மருத்துவர்களும் அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். என் தந்தைக்காக மேலும் பிரார்த்தனைகளை தொடருங்கள்.

Tags : SBP ,SPB , SPB , Physiotherapy treatment
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்