×

கேரளாவில் ஊரடங்கு நிபந்தனைகள் தளர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம்   பண்டிகையை மக்கள்சிறப்பாக கொண்டாடுவதற்காக, பல்வேறு  ஊரடங்கு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் ஓண பண்டிகையை கொண்டாடும் வகையில் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவிக்க பொது மக்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று ஊரடங்கு சட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை அரசு தளர்த்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
* செப்டம்பர் 2ம் தேதிவரை நீண்டதூர பஸ்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 வரை மாவட்டங்களுக்கு வெளியே இயக்கப்படும்.
* பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பிறமாநில, நகரங்களுக்கும் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படும்.
*  ஹைப்பர் மார்க்கெட், மால்கள் உள்பட வணிக வளாகங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 வரை செயல்படும்.
* ஓட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்படலாம்.
*  வங்கி, இன்சூரன்ஸ் உள்பட ேசவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* மதுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 வரை செயல்படலாம்.
*  மதுபார்கள் மாலை 5 மணிவரை மட்டுமே இயங்கலாம்.

மத்திய அரசுக்கு என் ஆலோசனை
நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘அன்பான மாணவர்களே, தேர்வுகள் தொடர்பாக கடினமான சூழலில் நீங்கள் இருப்பதை புரிந்து கொள்கிறேன். இந்த குழப்பத்தில் உங்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான். சிறப்பான இந்தியாவை கட்டமைக்க, உங்களையே நாங்கள் நம்பியுள்ளோம். உங்களின் எதிர்காலம் தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், உங்கள் கருத்து மதிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். அரசு உங்களின் இந்த கடினமான சூழலை கவனிக்க வேண்டும். உங்கள் குரலைக் கேட்கும் என்று நம்புகிறேன். இது, மத்திய அரசுக்கு என்னுடைய ஆலோசனயும் கூட,’ என்று கூறியுள்ளார்.

Tags : Kerala , Kerala, curfew, conditions, relaxation
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...