×

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் ஆஜர்

சென்னை: தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர்
எஸ்.வி. சேகர் மீண்டும் ஆஜராகி இருக்கிறார். தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் தற்போது 2ம் கட்ட
விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 24ம் தேதி சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவர் வெளியிட்ட வீடியோ குறித்த விளக்கங்களும் பெறப்பட்டது. நடிகர் எஸ்.வி. சேகர் தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போட்டதற்கு, காவியை களங்கம் என கூறிய முதல்வர், சுதந்திரத் தினத்தன்று தேசியக்கொடியில் காவியை நீக்கிவிட்டு பச்சை, வெள்ளை நிறம் கொண்ட கொடியை ஏற்றுவாரா என விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து தேசிய கொடியை அவர் அவமதித்ததாக ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார்
அளித்திருந்தார்.

இதையடுத்து, தேசிய சின்னங்கள் அவமதிப்பதை தடுத்தல் என்கின்ற பிரிவின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி ஆஜரானார். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு பின்பும் விசாரணை நிறைவடையாததால் இன்றைய தினம் (28.8.2020) ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவினர் தெரிவித்திருந்தார்கள்.

 அதன்படி எஸ்.வி. சேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வீடியோ தொடர்பான விசாரணை நடைபெறவிருக்கிறது. இதனிடையே முன்ஜாமீன் கோரிய அவரது மனுவும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Actor S.V. ,Actor ,Shaker Azar ,Chennai Commissioner , S.v.Shekar,Chennai Commissioner office,Enquiry,national Flag
× RELATED நடிகர் பரத் பங்கேற்பு