×

மாதம் 10 கோடி டோஸ் இலக்கு வெளிநாடுகளில் தடுப்பூசி உற்பத்தி துவங்க திட்டம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவிற்கு வெளியே, வெளிநாடுகளில் தடுப்பூசியை உற்பத்தியை தொடங்க இருப்பதாக சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனாவாலா கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த போதிலும், தடுப்பூசி இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம், விரைவில் தனது உற்பத்தியை வெளிநாடுகளில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்நிறுவன சிஇஓ ஆதார் பூனாவாலா நேற்று அளித்த பேட்டி ஒன்றில், ‘‘வெளிநாடுகளில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது தொடர்பாக இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஜூலை மாதத்திலிருந்து மாதத்திற்கு 10 கோடி தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் என கடந்த வாரம் கூறப்பட்டிருந்தது. ஆனால், மே இறுதியில் இருந்தே மாதத்திற்கு 10 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம். இதன் மூலம், இன்னும் 6 மாதத்தில் ஆண்டுக்கு 250 கோடியில் இருந்து 300 கோடியாக தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்….

The post மாதம் 10 கோடி டோஸ் இலக்கு வெளிநாடுகளில் தடுப்பூசி உற்பத்தி துவங்க திட்டம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Serum ,New Delhi ,CEO ,Dar Poonawala ,India ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...