×

ட்வீட் கார்னர்: ஜனவரியில் குவா குவா!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜனவரியில் முதல் குழந்தை பிறக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பதிந்துள்ளார். ‘இனி நாங்கள் மூவரானோம். ஜனவரி 2021ல் புதுவரவு!’ என்ற தகவலுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது. கோஹ்லி - நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Tweet Corner, January, Gua Gua!
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ