×

ஃபேஸ்புக் விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்தவர்கள் பட்டியலில் பாஜக முதலிடம்: கடந்த 18 மாதங்களில் ரூ.4.61 கோடி விளம்பரங்களுக்காக செலவு!!

டெல்லி : ஃபேஸ்புக்கிற்கு அதிக விளம்பரம் தரும் விளம்பரதாரர்களின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. கடந்த 18 மாதங்களில் அதிக விளம்பரம் கொடுத்த 10 விளம்பரதாரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அதிகம் செலவு செய்யும் கட்சியாக பாஜக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவிட்டுள்ளது. பட்டியலில் இருக்கும் மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜக உடன் தொடர்புடைய பக்கங்களை இயக்கி வருகின்றன.

இதில் 3 விளம்பரதாரர்கள் பாஜக தேசிய கட்சி அலுவலகத்தின் முகவரியையே குறிப்பிடுகின்றன. My First vote for modi என்ற பக்கம் கடந்த 18 மாதங்களில் ரூ.1.39 கோடிக்கு  செலவிட்டுள்ளது.  Bharat ke Mann ki Baat என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடி செலவிட்டுள்ளது. இந்த 2 ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்பாக தொடங்கப்பட்டுள்ளது. Nation with Namo என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.கே.சிங்கா தொடர்புடைய ஒரு பக்கம் 65 லட்சம் ரூபாயையும் செலவிட்டுள்ளது.

பாஜக மற்றும் அதனைச் சார்ந்த 4 ஃபேஸ்புக் பக்கங்களின் மொத்த விளம்பரம், முதல் 10 இடங்களின்மொத்த விளம்பரத்தில் 64% ஆகும். எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரூ1.84 கோடியை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் இருக்கும் ஆம் ஆத்மீ கட்சி 69 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.


Tags : BJP ,construction ,Madurai ,Central Health Department ,AIIMS Hospital , Aims to complete construction of AIIMS Hospital at Toppur, Madurai by September 2022: Central Health Department !!
× RELATED பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு...