×

மழை இல்லாததால் நெல்லிக்காய் விவசாயம் ‘டல்’: தேவாரம் மலையடிவார விவசாயிகள் கவலை

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் மழை இல்லாத நிலையில் நெல்லிக்காய் விவசாயம் அடியோடு சரிந்துவிட்டது.தேவாரம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக சாக்குலூத்து, கோம்பை அரிவாள்தீட்டிப்பாறை  உள்ளிட்ட இடங்களில் நெல்லிக்காய் விவசாயம் நடக்கிறது. இங்கு விளையக்கூடியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரைக்கு  அனுப்பிவைக்கப்படும். போர்வெல் போட்டு காடுகளை சமப்படுத்தி இந்த விவசாயம் நடக்கிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மழை இல்லை.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் அடியோடு சரிந்துவிட்டது.

தனியார் தோட்டங்களில் விரும்பி வளர்க்கப்படும் நெல்லிக்காய் விவசாயத்தில் சரிவு  உண்டாகி உள்ளதால் விவசாயிகள் தவிக்கின்றனர். குறிப்பாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. நெல்லிக்காய் தற்போது மிக  கிராக்கியாக வெளி மார்க்கெட்டிலேயே ரூ.100 வரை விலைபோகிறது. தேவாரம் மலையடிவாரத்தில் விளையும் நெல்லிக்காய் வந்தால், விலை  குறையும். இதேபோல் தேனிமாவட்டத்தின் எந்த பகுதிகளிலும் நெல்லிக்காய் விளைச்சல் பெரும் அளவில் இல்லை.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலத்தடி நீர்மட்டம் இப்போது இல்லை. இதனால் நெல்லிக்காய் விவசாயம் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த  சீசனில் வந்தால் நல்ல விலை கிடைக்கும். ஆனால் விளைச்சல் இல்லாமல் போனது ஒரு வகையில் ஏமாற்றமே என்றனர்.

Tags : foothills farmers ,Thevaram ,hill station farmers , Gooseberry,station, farmers, worried
× RELATED 18ம் கால்வாய் கரை உடைப்புகளால் தேவாரம்...