×

மஞ்சூர் அருகே மின் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையால் பீதி

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே மின்வாரிய ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையால் ஊழியர்கள் பீதி அடைந்தார்கள்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை மற்றும் பரளி பகுதிகளில் நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள மின்வாரிய  குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இந்த நிலையில் பரளி மின்வாரிய ஊழியர்  குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று  நேற்று முன்தினம் புகுந்தது. ஊழியர் பாலமுருகன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளி சேதப்படுத்தியது. அங்கிருந்த மரங்களின்  கிளைகளை ஒடித்ததுடன் துணிகளை காயப்போட்டிருந்த கொடிகளையும் பிய்த்து எறிந்தது.

இதைக்கண்ட மின்வாரிய ஊழியர்கள் பீதி அடைந்து குடும்பத்துடன் வீடுகளுக்குள் சென்று தாழிட்டு கொண்டார்கள். சுமார் ஒரு மணி நேர்த்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். அடிக்கடி காட்டு யானைகள் குடியிருப்புக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : apartment ,Manzoor , Manzoor,electrical, apartment,wild ,elephant
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...