×

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு அரசு அறிவித்த நிவாரணம் உரிய துறையில் வேலை வழங்கப்படவில்லை என புகார்

தூத்துக்குடி:  தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கும்படி, ஒரு நபர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இம்மாதம் 19ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கப்பட்டதால் உயிர் நீத்தவர்களின் தியாகத்திற்கு அடையாளமாய் அவை அமைந்தது. இதற்கிடையில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமென்று தமிழக அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால் வழங்கப்பட்ட பணிகள்யாவும் கல்வி தகுதிக்கு ஏற்றவை அல்ல என பாதிக்கப்பவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே தகுதிக்கு ஏற்ற துறையில் பணி வழங்க வேண்டுமென்று துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். இதற்கிடையில் சுற்றுசூழலை பாதுகாக்க போராடி, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான 13 பேருக்கும் நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு தொடர்பாக 21ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள ஒரு நபர் ஆணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Tags : government ,shootings ,Tuticorin ,Family Members ,thoothukudi Shooting , thoothukudi ,Shooting case,Family Members,government,Suitable jobs
× RELATED விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே...