×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை 25.23 லட்சத்தை தாண்டியது : குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உயர்வு!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 75,760 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,023 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  60,472 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 56,013 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 25,23,772 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,25,991 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது.
*நேற்று(ஆக.,26) ஒரே நாளில் 9,24,998 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,85,76,510 ஆக அதிகரித்துள்ளது

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மும்பை : சிகிச்சை பெறுவோர் :173195 ; குணமடைந்தோர் :522427; இறப்பு : 23089

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :52362; குணமடைந்தோர் :338060; இறப்பு :6839

டெல்லி : சிகிச்சை பெறுவோர் :12520 ; குணமடைந்தோர் :148897; இறப்பு : 4347

கேரளா : சிகிச்சை பெறுவோர் 22408 ; குணமடைந்தோர் :41690; இறப்பு :      257

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :83627 ; குணமடைந்தோர் :211688; இறப்பு : 5091

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :92208 ; குணமடைந்தோர் : 286720; இறப்பு : 3541

Tags : India ,coroners , India, Corona, Cure, Number, Rate, Rise
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!