×

காஞ்சி நகர திமுக பிரமுகர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர மறைந்த திமுக பிரமுகர் கே.ஜே.அகத்தியப்பன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் நகர மறைந்த திமுக பிரமுகர் கே.ஜே.அகத்தியப்பன் நூற்றாண்டு பிறந்த நாள் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மற்றும் அகத்தியப்பன் குடும்ப உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchi City DMK ,Centenary Birthday Celebration ,Birthday Celebration ,Celebrity , Kanchi City, DMK Celebrity, Centenary, Birthday Celebration
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...