×

தாய், மனைவி இருவரையும் கொன்றதாக ஒப்புக் கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: தாய், மனைவி இருவரையும் கொன்றதாக ஒப்புக் கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர் இக்பால் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். 62 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணம் டெலாவேர் கவுண்ட்டியில் வசிப்பவர், மனைவியையும் தாயாரையும் கொன்றதாக அவரே ஒப்புக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இக்பால் சிங் வீட்டுக்கு போலீஸ் வந்த போது இக்பால் சிங் ரத்தத்தில் நனைந்திருந்தார், தன்னைத்தனே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிகிறது, ஆனால் உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் தெரிந்தன. இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை என்பதாலும், செயலின் கொடூரத்தன்மையினாலும் இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் வைத்துக் கொண்டதாக தெரியவில்லை.

தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு போலீஸ் காவலில் அவர் இருக்கிறார். தாயார் நசீப் கவுர் தொண்டையை அறுத்தும், மனைவி ஜஸ்பால் கவுர் தொண்டை அறுபட்டும் கிடந்தனர். சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர். ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

இவர் முன்பு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை, குற்றவாளிகளுடன் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே ஏன் நடந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. இக்பால் சிங் கொலையை செய்து விட்டு தன் மகனுக்கு தொலைபேசியில், நான் உன் அம்மாவையும் பாட்டியையும் கொலை செய்து விட்டேன், போலீஸைக் கூப்பிடு என்று கூறியுள்ளார். பிறகு மகளையும் அழைத்து இதே போல் பேசியுள்ளார் இக்பால் சிங். அப்போதுதான் வீட்டுக்கு வந்த போது இக்பால் சிங் செய்த கொடுஞ்செயல் தெரியவந்தது.

இக்பால் சிங்கை நன்றாக தெரியும் என்று அண்டை விட்டார்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர், நடைப்பயிற்சி செய்வார் என்றும் நியூடவுன் சதுக்கத்தில் தியானம் செய்வார் என்றும் கூறினர். ஆனால் கொலை செய்த அன்று அவர் வழக்கமான மூடில் இல்லை, மிகவும் பதற்றமாக இருந்ததாக அண்டை வீட்டில் உள்ள ஸ்யூ டேவிசன் என்பவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 



Tags : athlete ,Indian ,USA , USA, arrested, athlete
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...