×

பிஇ, பிடெக் சேர்க்கை 1.14 லட்சம் பேர் சான்று பதிவேற்றம்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு சேர 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் சான்றுகளை பதிவேற்றம் செய்துள்ளனர். பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதை அடுத்து, கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி அசல் சான்றுகளை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் தங்கள் சான்றுகளை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். நாளை ரேண்டம் எண்கள் வெளியிடப்படுகிறது. ெசப்டம்பர் 1ம் தேதி வரை சேவை மையங்களில் அசல் சான்றுகள் சரிபார்ப்பு நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளன.

Tags : BTech , PE, BTech admission, 1.14 lakh people, certificate upload
× RELATED நேரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா