×

யுபிஐயில் பணம் அனுப்ப கட்டணம் வங்கிகள் வசூல்

புதுடெல்லி: வங்கி கணக்கில் இருந்து மொபைல் போன் மூலம் பரிவர்த்தனை செய்ய பீம் யுபிஐ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கூகுள் பே, பே டிஎம், போன் பே மற்றும் பெரும்பாலான வங்கிகள் யுபிஐ சேவையை வழங்குகின்றன. இதில் பணம் அனுப்ப கட்டணம் கிடையாது. ஆனால், சில தனியார் வங்கிகள் தற்போது கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்து மும்பை ஐஐடி வெளியிட்ட வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ஊரடங்கு காலத்தில் மாதம் 8 சதவீதம் வீதம் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 80 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதனால் சில தனியார் வங்கிகள்யுபிஐ பரிவர்த்தனைகளை மாதம் 20 பரிவர்த்தகனகள் வரை மட்டும் அனுமதிப்பதாகவும், அதற்கு மேல் ரூ.1,000 வரை அனுப்ப ரூ.2.50 ரூ.2.75, ரூ.1,000க்கு மேல் ரூ.4.75 முதல் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கின்றன. தேவையற்ற பரிவர்த்தனைகளை தடுப்பதற்காகவே வங்கிகள் இதை செயல்படுத்தியுள்ளன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Banks ,UPI , In UPI, remittances, fees, bank collections
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்