×

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்!: இளம் சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா துன்பெர்க் கோரிக்கை..!

ஸ்வீடன்: நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஸ்வீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா கோரிக்கை விடுத்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்குமாறு நாளுக்கு நாள் அனைத்து தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க ஸ்வீடன் சிறுமி கிரெட்டா துன்பெர்க் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கிரெட்டா துன்பெர்க், இந்திய மாணவர்கள் கொரோனா தொற்று நோய்களின் போது தேசிய தேர்வுகளை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது.

இந்தியாவில் கொரோனா மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் நீட் தேர்வு அவசியமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. நீட் தேர்வு எழுதும் மனநிலையில், மாணவர்கள் இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் தாம் உறுதுணையாக இருப்பதாகவும் துன்பெர்க் கூறியிருக்கிறார். உலக வெப்பமயமாதலுக்கு எதிராக போராடிய சிறுமி கிரெட்டா, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து பேசி புகழ்பெற்றவராவார். அதோடு உலக தலைவர்களை கேள்வி கேட்டவர் கிரெட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Elections ,JEE ,Greta Dunberg ,NEET ,Greta Thunberg , NEET,JEE Mains,Greta Thunberg
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு