×

எதிர்க்கட்சிக்கு இருக்கும் உரிமையே ஆதாரங்களை சுட்டிக்காட்டுவது தான்..: திமுக பொருளாளர் துரைமுருகன்

சென்னை: எதிர்க்கட்சிக்கு இருக்கும் உரிமையே ஆதாரங்களை சுட்டிக்காட்டுவது தான் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 2017ம் ஆண்டு சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்பவும், அப்படி அனுப்பப்படும் நோட்டீஸில் மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்விகாரம் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புகார் தொடர்பாக ஆதாரங்களை கொண்டு வந்து சபையில் காட்டுவது புதிதல்ல. எதிர்க்கட்சிக்கு இருக்கும் உரிமையே ஆதாரங்களை சுட்டிக்காட்டுவது தான். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது, என கூறியுள்ளார்.


Tags : Duraimurugan ,DMK ,Opposition , Rights Violation Case, Gutka, DMK, Duraimurugan, Legislature
× RELATED சாட்டை துரைமுருகனுக்கு நவாஸ் கனி தரப்பு நோட்டீஸ்..!!