×

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: அயனாவரத்தில் கடந்த 21ம் தேதி அதிகாலை கஞ்சா மொத்த வியாபாரியும் பிரபல ரவுடியுமான சங்கரை (48) போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக, என்கவுன்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த கூடாது. அதேநேரம் காவல் துறையில் உள்ள மற்றொரு பிரிவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை மாநகர காவல் துறையில் இருந்து நேற்று சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து ரவுடி சங்கரை என்கவுன்டர் செய்த இன்ஸ்பெக்டர் நட்ராஜ் உட்பட சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் சங்கரின் சகோதரி ரேணுகா கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சடலத்தை பெற்றுக் கொண்டார். மதியம் 3 மணியளவில் ஓட்டேரி மயானத்தில் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, சங்கரின் வீடு உள்ள அயனாவரம் கேகே நகர் பகுதி மற்றும் ஓட்டேரி சுடுகாடு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரவுடி சங்கரின் சகோதரி ரேணுகா கூறுகையில், ‘இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அயனாவரம் போலீசார் எங்களை மிரட்டி வருகின்றனர்’ என்றார்.

Tags : DGP Tripathi ,Rowdy Shankar , Rowdy Shankar, Encounter affair, CPCIT case, change, DGP Tripathi
× RELATED இன்று காவலர் வீர வணக்க நாள்:...