×

பாக். அறிவிப்பு தலைமறைவு குற்றவாளி நவாஸ் ஷெரீப்

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். உடல் நலக்குறைவால் ஜாமீன் பெற்று இங்கிலாந்தின் லண்டன் சென்ற அவர் திரும்பவில்லை. கொரோனா பாதிப்பால் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தனது மருத்துவ அறிக்கையை லாகூர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பருடன் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட 4 வார ஜாமீன் முடிவடைந்த நிலையில் அவர் திரும்பாததால் ‘தலைமறைவு’ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் செஷாத் அக்பர் நேற்று தெரிவித்தார்.

ஷெரீப்பை லண்டனில் இருந்து நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் லண்டனில் ஷெரீப் தனது மகனுடன் சாலையில் வாக்கிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

Tags : Bach ,Nawaz Sharif ,Pakistan ,UK , Nawaz Sharif ,Pakistan ,UK ,extradition
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்