×

உலகளவில் கொரோனா நோயை வென்றவர்கள் எண்ணிக்கை 1.60 கோடியை தாண்டியது!!

ஜெனீவா : சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில்  உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரத்து 485 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 35 லட்சத்து 82 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 12 ஆயிரத்து 487 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 514பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 58,74,123, உயிரிழப்பு - 1,80,604, குணமடைந்தோர் - 31,67,028
பிரேசில்       -    பாதிப்பு - 36,05,783, உயிரிழப்பு - 1,14,772, குணமடைந்தோர் - 27,09,638
இந்தியா       -    பாதிப்பு - 31,05,185, உயிரிழப்பு -  57,692, குணமடைந்தோர்  - 23,36,796
ரஷியா        -    பாதிப்பு -  9,56,749, உயிரிழப்பு -  16,383, குணமடைந்தோர்  -  7,70,639
தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு -  6,09,773, உயிரிழப்பு -  13,059, குணமடைந்தோர்  -  5,06,470

பெரு - பாதிப்பு -  594,326, உயிரிழப்பு -  27,663 , குணமடைந்தோர்  -  399,357
மெக்சிகோ - பாதிப்பு -  560,164, உயிரிழப்பு -  60,480, குணமடைந்தோர்  -  383,872
கொலம்பியா - பாதிப்பு -  541,147 , உயிரிழப்பு - 17,316, குணமடைந்தோர்  -  374,030
ஸ்பெயின் - பாதிப்பு - 407,879, உயிரிழப்பு -  28,838, குணமடைந்தோர்  -  
சிலி - பாதிப்பு -  397,665, உயிரிழப்பு -  10,852 , குணமடைந்தோர்  -  371,179

Tags : coronavirus survivors , Corona disease, winners, number, 1.60 crore
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ