×

லாரி மோதி மாணவன் பலி

புழல்: சென்னை வியாசர்பாடி நேரு நகர் 2வது தெரு சேர்ந்தவர் கௌரிசங்கர்(20). இவர் அலமாதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இவர் தனது நண்பர் விக்னேஷ் உடன் நேற்று தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு பைக்கில் சென்று விட்டு வீட்டுக்கு  திரும்பிக் கொண்டிருந்தார். இவர்கள் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்த கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கௌரிசங்கர் இறந்தார். விக்னேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


Tags : collision ,Larry ,student , Larry Moti, student, killed
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி