×

அயனாவரம் உதவி கமிஷனர் உட்பட 22 போலீசாருக்கு கொரோனா

சென்னை: சென்னை மாநகரில் அயனாவரம் உதவி கமிஷனர் சீனிவாசன் உட்பட 22 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அயனாவரம் உதவி கமிஷனர் சீனிவாசன் உட்பட 22 போலீசாருக்கு  நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொற்று பாதித்த அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை மொத்தம் தொற்று எண்ணிக்கை 2,112 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 17 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது.

Tags : policemen ,Corona ,Ayanavaram ,Assistant Commissioner , Ayanavaram, Assistant Commissioner, 22 to Police, Corona
× RELATED கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்...