×

சூரரைப் போற்று ஓடிடியில் ரிலீஸ் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவுக்கு எதிர்ப்பு

சென்னை: சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ‘காலச்சூழ்நிலையால் இந்த படத்தை அக்டோபர் 30ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் நடிகனாக இல்லாமல் தயாரிப்பாளராக இருந்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த படத்தை சார்ந்த படைப்பாளிகளின் நலனை கருதியே இந்த முடிவு’ என சூர்யா கூறினார். இது பற்றி தமிழக தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியது:

தியேட்டரை நம்பி, அதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள தொழிலாளர்களை பற்றி யோசிக்காமல் சூர்யா முடிவு எடுத்துள்ளார். தியேட்டர் தொழில் நலிவடைந்து இருக்கும்போது, இதற்கு ஆதரவாக இல்லாமல் தியேட்டர் அதிபர்களுடன் பேசாமல் அவராகவே எடுத்திருக்கும் முடிவு வருத்தம் தருகிறது. இது சரியான வியாபார முறையல்ல. ஜோதிகா நடிப்பில் அவர் தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தபோது, சூரரைப் போற்று படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன் என சொல்லியிருந்தார். இப்போது அதை மீறி ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தவறை செய்கிறார். தியேட்டர்கள் செப்டம்பரில் திறக்கப்படும் என தெரிகிறது. தியேட்டர்கள்  திறந்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும்.

Tags : Surya , Praising Surya, ODT release, theater principals, opposition to Surya
× RELATED அரிவாள்மனையால் அறுத்துக் கொண்ட ரவுடி