×

காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கை மீறி பெட்ரோல் பங்க் இயங்குவதாக புகார்: இறைச்சிக் கடைகளும் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில்(இன்று) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கு என்பது முறையாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பு ;நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு, ஜூலை மாதம் மற்றும் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை ஏற்கனவே அமல்படுத்தியது.

இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கு உத்தரவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முறையாக கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் உத்தரவை மீறி திறந்துள்ளது. மேலும், காஞ்சிபுரத்தின் ரங்கசாமி நகர் பகுதியில் இறைச்சி கடைகள் அதிகளவில் திறந்துள்ளதாகவும், இதனால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் அரசாங்க உத்தரவை பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை பின்பற்றாமல் பூக்கடை சத்திரம் பகுதியில் காய்கறிகள் கடைகள், பூக்கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்துள்ளது. மேலும் உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்ட பெட்ரோல்  நிலையத்திற்கு அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்த பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : meat shops ,Kanchipuram , Kanchipuram, full curfew, petrol punk, people, charge
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...