×

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் : பாஜக 47 இடங்களில் முன்னிலை

திஸ்புர் : அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்டத் தகவலின்படி பாஜக 47 இடங்களிலும் காங்கிரஸ் அணி 24 இடத்திலும் முன்னணியில் உள்ளன.அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியே காணப்பட்டது.அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்டத் தகவலின்படி பாஜக கூட்டணி 47 இடங்களிலும் காங்கிரஸ் அணி 24 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதர கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. …

The post அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் : பாஜக 47 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Assam Assembly Election ,BJP ,Tispur ,Assam Assembly elections ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு ஒருவரே 5 முறை வாக்களித்ததாக...